பிற விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி

இகா ஸ்வியாடெக், மேக்டா லினெட்டை சந்தித்தார்.

வாஷிங்டன்,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வரு கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்ட இகா ஸ்வியாடெக் (போலந்து), 50-ம் நிலை வீராங்கனையும், சகநாட்டவ ருமான மேக்டா லினெட்டை சந்தித்தார்.

இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட் 1-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் குக்கு அதிர்ச்சி அளித்தார். 2021-ம் ஆண்டுக்கு பிறகு ஸ்வியாடெக் தனது தொடக்க ஆட் டத்தில் தோல்வியை தழுவியது இதுவே முதல்முறையாகும்.