சென்னை,
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் யுகி பாம்ப்ரி (இந்தியா)-மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) இணை , ஜான் பாட்ரிக் சுமித் (ஆஸ்திரேலியா)-சான்டெர் அரென்ட்ஸ் (நெதர்லாந்து) ஜோடியிடம் மோதியது.
இந்த ஆட்டத்தில் 6-7, 5-7, 13-15 என்ற செட் கணக்கில் ஜான் பாட்ரிக் சுமித் ஜோடியிடம் தோற்று யுகி பாம்ப்ரி - மைக்கேல் வீனஸ்ஜோடி வெளியேறியது.