பிற விளையாட்டு

தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் இன்று தொடக்கம்

ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படுகிறது.

சென்னை,

இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் சார்பில் எச்.சி.எல். நிறுவனம் ஆதரவுடன் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் இன்று முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் அபய்சிங், ' ஜோஸ்னா சின்னப்பா, ராதிகா சீலன், ராகுல் பைதா, ஹரிந்தர் பால்சிங் சந்து, வேலவன் செந்தில்குமார் உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.3.3 லட்சமாகும். இந்த போட்டியில் அடிப்படையில், மலேசியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெறும் 2-வது ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படுகிறது