சென்னை,
இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் சார்பில் எச்.சி.எல். 3-வது தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேருபார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வந்தது. இதில் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த செந் தில்குமார்-ஜோஸ்னா சின்னப்பா இணை 11-7, 11-9 என்ற நேர்செட்டில் சக மாநிலத்தவரான அபய்சிங் -ராதிகா சீலன் ஜோடியை தோற்கடித்து சாம்பி யன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் செந்தில்குமார்-அபய்சிங் கூட்டணி 11-8, 11-5 என்ற நேர்செட் டில் மராட்டியத்தை சேர்ந்த ராகுல் பைதா-சுரஜ்குமார் சந்த் இணையை தோற்கடித்து தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத் தியது. பெண்கள் இரட்டையர் இறுதி சுற்றில் தமிழகத்தின் ஜோஸ்னா-ராதிகா ஜோடி 11-8, 11-4 என்ற நேர்செட்டில் ஜானெட் விதி(டெல்லி)-பூஜா ஆர்த்தி (தமிழகம்) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்த மாக்கியது.