ராஞ்சி,
தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.
இதன் பெண்கள் ஜூனியர் அணிகள் ஸ்பிரிண்ட் பிரிவில் ஜெய் ஜோத்ஸ்னா, ஹாஷினி, தபிதா ஆகியோர் அடங்கிய தமிழக அணி 1 நிமிடம் 16.383 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டில் அந்தமான் நிக்கோபார் அணி 1 நிமிடம் 16.593 வினாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.மேலும் ஜூனியர் தனிநபர் பிரிவில் தபிதா தங்கப்பதக்கமும். ஹாஷினி வெள்ளியும், ஜெய் ஜோத்ஸ்னா வெண்கலமும் கைப்பற்றினர்.