சென்னை,
44வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மேற்கு வங்காளத்தில் வருகிற 25ந் தேதி முதல் 30ந் தேதி வரை நடக்கிறது. இதேபோல் 20வது தேசிய இளையோர் (யூத்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மத்தியபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 2ந் தேதி முதல் 7ந் தேதி வரை நடக்கிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து அணிகள் தேர்வு சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (10ந் தேதி) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் முறையே 112000 மற்றும் 111997க்கு பிறகு பிறந்த வீரர்வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தகுந்த வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்துள்ளார்.