சென்னை,
சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளுக்கு இடையிலான 7-வது தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி பெங்களூருவில் நடந்தது. இதில் பங்கேற்ற சென்னை அடையாறில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் படிக்கும் மாணவி ஹேனா ஜரின் டேபிள் வால்ட் பிரிவில் தங்கப்பதக்கமும், பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், புளோர் எக்சசைஸ் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றார்.
இதன் மூலம் அவர் தேசிய பள்ளிகள் விளையாட்டு சம்மேளனம் சார்பில் நடைபெறும் தேசிய போட்டிக்கு தேர்வாகி இருக்கிறார்.