பிற விளையாட்டு

தேசிய சீனியர் கபடி: தமிழக அணி தோல்வி

குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வந்தது.

வதோதரா,

72-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வந்தது. இதில்காலிறுதியில் தமிழக அணி 34-39 என்ற புள்ளி கணக்கில் சண்டிகாரிடம் போராடி தோற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே 49-31 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.