பிற விளையாட்டு

தேசிய சீனியர் கபடி: தமிழக அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி

தமிழக அணி, 'நம்பர் ஒன்' அணியான அரியானாவை எதிர்கொண்டது.

வதோதரா,

72-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதிக்கு முந் தைய சுற்று ஆட்டத்தில் தமிழகம், 'நம்பர் ஒன்' அணியான அரியானாவை எதிர்கொண்டது.

இந்த ஆட்டம் 35-35 என்ற புள்ளி கணக் கில் சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து நடந்த டைபிரேக்கர் முடி வில் தமிழக அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை தோற்க டித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.