பிற விளையாட்டு

தேசிய சீனியர் கபடி: தமிழக அணி வெற்றி

'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மணிப்பூரை சந்தித்தது.

வதோதரா,

72-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 29 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதன் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் மணிப்பூரை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 75-16 என்ற புள்ளி கணக்கில் மணிப்பூரை தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழக அணி விதர்பா வையும் (மாலை 5 மணி), உத்தரபிரதேசத்தையும் (இரவு 9 மணி) எதிர் கொள்கிறது.