பிற விளையாட்டு

தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ்: பாலமுருகன்- சித்தேஷ் பாண்டே இணை தோல்வி

பாலமுருகன்- சித்தேஷ் பாண்டே ஜோடி, ஜீத் சந்திரா அனிர்பன் கோஷ் இணையிடம் மோதியது.

இந்தூர்,

87-வது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தூ ரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் தமிழகத்தின் பாலமுருகன்- சித்தேஷ் பாண்டே ஜோடி, ஜீத் சந்திரா அனிர்பன் கோஷ் (ரெயில்வே) இணையிடம் மோதியது.

இதில் 13-11, 4-11, 12-14, 7-11 என்ற செட் கணக்கில் பாலமுருகன்- சித்தேஷ் பாண்டே ஜோடி தோல்வியடைந்தது.