மும்பையில் நடைபெற்ற 82-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் அபய் சிங் 3-வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மும்பை,
82-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் அபய் சிங் 11-6, 11-4, 11-9 என்ற நேர் செட்டில் மும்பையின் வீர் சோத்ராணியை வீழ்த்தி 3-வது முறையாக பட்டத்தை வசப்படுத்தினார்.
பெண்கள் பிரிவின் இறுதி சுற்றில் தகுதி நிலை வீராங்கனையான ஆகாங்ஷா சலுன்கே (கோவா) 11-6, 11-4, 11-4 என்ற நேர் செட்டில் தமிழகத்தின் ஷமீனா ரியாசை வீழ்த்தி முதல் முறையாக தேசிய பட்டத்தை சொந்தமாக்கினார்.
அபய்சிங் கூறுகையில், “எனக்கு இந்த கோடை காலம் மிகவும் கடினமாக இருந்தது. காயம் காரணமாக 6 வாரங்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டி இருந்தது. ஆசிய விளையாட் டின் போது காயத்தால் ஒரு காலால் மட்டுமே விளையாடினேன். அந்த சூழலில் விளையாடக் கூடாது என்று சொன்னார்கள். ஆனாலும் சமாளித்து வெள்ளிப்பதக்கம் வென்றேன்” என்றார்.