ஆக்லாந்து,
பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று நடந்த அரையிறுதியில் இந்திய அணி சிலி அணியுடன் மோதியது.
ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனைகள் அதிரடியாக ஆடி னர்.இறுதியில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.