ஆக்லாந்து,
சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் நேஷன்ஸ் கோப்பைக்கான சர்வதேச மகளிர் ஆக்கி போட்டிகள் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடந்தன. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 2-0 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியில் நவ்நீத் கவுர், சுனேலிதா டோபோ கோல் அடித்தனர்.