தோஹா,
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நிரஜ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டியில் நிராஜ் குமார் 346.5 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
டிமிட்ரி பிமெனோவ் 362.8 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தையும், ஸ்லோவாக்கியாவின் பாட்ரிக் ஜானி 357.2 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
இந்தியாவின் மற்றொரு வீரரான ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 323.7 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் இரண்டாவது ஒதுக்கீட்டு இடத்தை நிராஜ் குமார் பெற்றுத் தந்துள்ளார்.
முன்னதாக, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ஜெய்பால் மாள்வியா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் 242.2 புள்ளிகள் பெற்ற அவர், இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடத்தை பெற்றுத் தந்தார்.
அந்தப் போட்டியில் சீனாவின் ஹு காய் 243.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். தற்போது நிராஜ் குமாரின் வெற்றியால் இந்தியாவின் ஒலிம்பிக் கோட்டாக்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.