பிற விளையாட்டு

நார்வே செஸ்: பிரக்ஞானந்தாவை வீழ்த்திய குகேஷ்

குகேஷ் 47-வது காய் நகர்த்தலில் சக நாட்டவரான பிரக்ஞானந்தாவை தோற்கடித் தார்.

சென்னை,

6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நடந்த 5-வது சுற்று ஆட்டம் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 47-வது காய் நகர்த்தலில் சக நாட்டவரான பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார்.

'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) 59-வது நகர்த்தலில் வெஸ்லி சோவிடம் (அமெரிக்கா) தோல்வி அடைந்தார்.