சென்னை,
6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் வீரர்கள் தங்களுக் குள் தலா 2 முறை மோத வேண்டும். 10 சுற்றுகள் முடிவில் முதலிடம் பிடிப்பவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.இதில் ஆண்கள் பிரிவில் நடந்த 8-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான உள்ளூர் வீரர் மாக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்டார்.
கருப்பு நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தின் பிரக்ஞா னந்தா 50-வது காய் நகர்த்தலில் கார்ல்செனை வீழ்த்தினார். நடப்பு தொடரில் பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டத்தில் கார்ல்செனை தோற்க டிப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே அவருக்கு 3-வது சுற்று ஆட் டத்திலும் அதிர்ச்சி அளித்து இருந்தார்.