பிற விளையாட்டு

நார்வே சர்வதேச செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா வெற்றி

10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக் கும் வீரர், வீராங்கனை மகுடம் சூடுவார்.

ஆஸ்லோ,

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நேற்று முன்தி னம் தொடங்கியது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 10 ரவுண்ட் முடிவில் முதலிடம் பிடிக் கும் வீரர், வீராங்கனை மகுடம் சூடுவார்.

ஆண்கள் பிரிவில் முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதினார். வெள்ளைநிற காய்களுடன் ஆடிய குகேஷ் கிட்டத்தட்ட 144-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதையடுத்து வெற்றி- தோல் வியை நிர்ணயிக்க ஆர்மகேட்டன் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குகேஷ் 22-வது நகர்த்தலில் கீமரை தோற்கடித்தார். அவருக்கு 1.5 புள்ளியும், கீமருக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது. இதே போல் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, ஆர்மகேட்டன் முறையில் அமெரிக் காவின் வெஸ்லி சோவை 43-வது நகர்த்தலில் சாய்த்தார்.

பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், சீனாவின் ஜூ வென்ஜனுக்கு எதிரான முதல் சுற்றில் வழக்கமான கிளா சிக்கலில் 'டிரா' கண்டாலும் ஆர்மகேட்டன் முறையில் வெற்றியை வசப்படுத்தினார்.