பிற விளையாட்டு

நார்வே சர்வதேச செஸ்: கார்ல்செனை வீழ்த்திய பிரக்ஞானந்தா

தமிழக வீரர் பிரக்ஞானந்தா, மாக்னஸ் கார்ல்சென்னுடன் (நார்வே) மோதினார்.

ஆஸ்லோ,

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வரு கிறது. 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 10 சுற்று களை கொண்டது. இதன் ஓபன் பிரிவின் 3-வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான மாக்னஸ் கார்ல்சென்னுடன் (நார்வே) மோதினார்.

வெள்ளைநிற காய்களுடன் சாதுர்யமாக விளையாடிய பிரக்ஞானந்தா 46-வது நகர்த்தலில் கார்ல்செ னுக்கு அதிர்ச்சி அளித்து 3 புள்ளிகளை தட்டிச் சென்றார். நார்வே செஸ் தொடரில் 'கார்ல்சென்னை, பிரக்ஞானந்தா வீழ்த்து வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2024-ம் ஆண்டிலும் அவருக்கு 'செக்' வைத்திருந்தார்.