ஆஸ்லோ,
14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வரு கிறது. 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி 10 சுற்று களை கொண்டது. இதன் ஓபன் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரரும், உலக சாம்பியனுமான குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை எதிர் கொண்டார்.
கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 116-வது நகர்த்த லில் டிரா செய்தார். இதையடுத்து வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட ஆர்மகேட்டன் முறையில் குகேஷ் 27-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார்.
மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தின் பிரக் ஞானந்தா 60-வது நகர்த்தலில் பிரான்சின் அலிரெஜா பிரோஸ்ஜாவிடம் தோல்வியை தழுவினார்.