பிற விளையாட்டு

ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல்....பி.டி.உஷா போட்டியிட வாய்ப்பு

பி.டி.உஷா தோல்வி அடைந்ததால் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 5-ந் தேதி நடக்கிறது. இதன் ஒருபகுதியாக நடந்த சிறப்பு தகுதி பெற்ற வீராங்கனைகளுக்கான தேர் தலில் தற்போதைய இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான பி.டி.உஷா தோல்வி அடைந்ததால் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

பி.டி. உஷா

இந்த நிலையில் இந்திய ஐஸ் ஆக்கி சம்மேளனம் பி.டி. உஷா பெயரை பொதுக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால் பொதுக்குழு உறுப்பினர் என்ற வகையில் அவர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் ஐஸ் ஆக்கி சம்மேளன உறுப்பினராக இல்லாத ஒருவரை அதன் சார்பில் பொதுக்குழுவில் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது என்று அந்த சம்மேளனத்தின் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT