ஐச்சி-நகோயா,
இந்திய வீரர் நிஷாத் குமார் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரர், வீராங்கனைகள் தடகளம், பாரா பளுதூக்குதல், துப்பாக்கிச் சுடுதல், மேசைப்பந்து, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் இந்தியாவின் நிஷாத் குமார், 2.04 மீட்டர் உயரத்தைத் தாண்டி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியதுடன் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான புதிய சாதனையையும் பதிவு செய்தார்.
இந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நிஷாத் குமார் வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னதாக ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் டி47 பிரிவிலும் 7.11 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றிருந்தார். தற்போது உயரம் தாண்டுதலிலும் தங்கம் வென்று தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.