பிற விளையாட்டு

பாரா ஆசிய விளையாட்டு: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை

மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

டோக்கியோ,

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் நேற்று முன் தினம் தொடங்கின. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஸ்ரிஷ்டி அரோரா 214.7 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை ஸ்ரிஷ்டி அரோரா மேலும் உயர்த்தியுள்ளார்.இந்த வெண்கலப் பதக்கம், நடப்பு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த நான்காவது பதக்கமாகும்.

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் ஈரான் வீராங்கனை ஃபைசே அஹ்மதி 237.3 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த சாரே ஜவன்மார்டி 237.0 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

SCROLL FOR NEXT