ஜகர்தா,
இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் ஷரத்குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீரர் வருண் சிங் பாத்தி 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரான சேலத்தை சேர்ந்த மாரியப்பன் 1.67 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். தங்கப்பதக்கம் வென்ற 26 வயதான ஷரத்குமார் பீகாரை சேர்ந்தவர் ஆவார். இளம் வயதிலேயே போலியோ நோயினால் கால் பாதிக்கப்பட்ட ஷரத்குமார் 2017-ம் ஆண்டு நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.