பிற விளையாட்டு

பாரா உலக வில்வித்தை: 2 தங்கப் பதக்கம் வென்ற இந்தியா

இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஆமதாபாத்,

பாரா உலக வில்வித்தை சீரிஸ் (நிலை 3) போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் தோமன் குமார்- ஷியாம் சுந் தர் ஸ்வாமி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 152-139 என்ற புள்ளி கணக்கில் ஈராக்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இதேபோல் ஆண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஹர்விந்தர் சிங்- விஜய் சன்டி அடங்கிய இந்திய அணி 6-2 என்ற கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் பாவ்னா- பூஜா ஆகியோரை கொண்ட இந்திய அணி 0-6 என்ற கணக்கில் சீனாவிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி கண்டது. காம்பவுண்ட் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஷீத் தல் தேவி- பாயல் நாக் ஜோடி (இந்தியா) சீனாவிடம் தோற்று பதக்க வாய்ப்பை பறிகொடுத்தது.

SCROLL FOR NEXT