பிராக்,
பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்தது. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் 8-வது ரவுண்டில் 'டிரா' செய்த உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், 9-வது மற்றும் கடைசி சுற்றில் நேற்று ஸ்பெயினின் டேவிட் ஆன் டனை எதிர்கொண்டார். கருப்புநிற காய்களுடன் ஆடிய குகேஷ் 56-வது நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார்.
இந்த தொடரில் அவர் பெற்ற ஒரே வெற்றி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், செக்குடியரசின் டேவிட் நவராவை வீழ்த்தினார்.
கடைசி சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தோ ரோவ் 6½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். குகேஷ் 3.5 புள்ளியுடன் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.