பிற விளையாட்டு

பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டக்தை உறுதி செய்தார்.

புதுடெல்லி,

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 20 வயதான பிரக்ஞானந்தா, இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி பட்டக்தை உறுதி செய்தார்.

இந்த நிலையில் நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த மகத்தான சாதனைக்காக பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகள்!

இது உண்மையிலேயே அவரது தொடர்ச்சியான சிறப்பை எடுத்துக்காட்டும் ஒரு அற்புதமான மைல்கல். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.