புதுடெல்லி,
சமீபத்தில் ஜப்பானின் நகோயா நகரில் நடந்த 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 495 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 36 விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இறுதியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை குவித்து 4-வது இடத்தை தக்க வைத்தது.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் பங்கேற்ற மற்றும் பதக்கம் வென்று சாதித்த வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் இன்று கலந்துரையாடினார் .பதக்கம் வென்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள், மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.