ஹோபர்ட்,
9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் போட்டி தொடரில் ஆஸ் திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி மீண்டும் ஸ்பெயினை சந்தித்தது.
இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. எனவே வெற்றி, தோல்வியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக் கப்பட்டது. இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது. நடப்பு தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.