பெங்களூரு,
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த திரிலிங்கான ஒரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 36-35 புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுக்கு அதிர்ச்சி அளித்தது. கடைசி வினாடிகளில் ஒரு புள்ளி முன்னிலையில் இருந்த நிலையில் உ.பி.யோத்தா வீரர் சுரேந்தர் கில் கட்டாயம் புள்ளி எடுக்க வேண்டிய நெருக்கடியுடன் ரைடுக்கு சென்றார்.
ஆனால் விவேகமாக செயல்பட்ட அவர் உள்கோட்டை தொட்டு போனல் புள்ளியை எடுத்துவிட்டு அவர்களிடம் சிக்கி கொண்டார்.
இதையடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் அதே ஒரு புள்ளி முன்னிலையுடன் உ.பி. யோத்தா வெற்றியை வசப்படுத்தியது.
இதே போல் கடைசி நிமிடம் வரை பரபரப்பாக நகர்ந்த மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 34-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது.
இன்றைய ஆட்டங்களில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), பெங்களூரு புல்ஸ்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.