பிற விளையாட்டு

ஆர்க்டிக் ஓபன் காலிறுதியில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி... தொடரிலிருந்து வெளியேற்றம்!

காலிறுதியில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்க்டிக் ஓபன் தொடரில் சிந்துவின் பயணம் முடிவுக்கு வந்தது.

வாண்டா,

ஆர்க்டிக் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

3 செட்கள் வரை நீடித்த ஆட்டம்

பின்லாந்தின் வாண்டா நகரில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து, தாய்லாந்தின் ரட்சனோக் இன்தானனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சிந்து 11 - 21, 21- 19, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

முதல் செட்டை இன்தானன் எளிதில் கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டில் சிந்து மிகச்சிறப்பாக மீண்டு வந்து சமன் செய்தார்.

இருப்பினும், கடைசி செட்டில் இன்தானன் வெற்றியைத் தட்டி சென்றார்.

இன்தானனிடம் தொடரும் பின்னடைவு

இது ரட்சனோக் இன்தானனுக்கு எதிராக சிந்து சந்திக்கும் 10-வது தோல்வியாகும். மேலும், இவர்கள் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் இன்தானனே வெற்றி பெற்றுள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் தோல்வியடைந்ததன் மூலம் ஆர்க்டிக் ஓபன் தொடரில் சிந்துவின் பயணம் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT