தோஹா,
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.