தோஹா,
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் உடன் மோதினார்.
இதில் ஆதிக்கம் செலுத்தி சிட்சிபாஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதனால் மெத்வதேவ் தொடரிலிருந்து வெளியேறினார்.