பிற விளையாட்டு

குயின்ஸ் கிளப் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

கி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, குரோசியாவின் மேட் பெவிக்- எல் சால்வடாரின் மார்சிலோ ஜோடி உடன் மோதியது.

லண்டன்,

எச்.எஸ்.பி.சி. குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, குரோசியாவின் மேட் பெவிக்- எல் சால்வடாரின் மார்சிலோ ஜோடி உடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி ஜோடி 4-6, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.