செயிண்ட் லூயிஸ்,
இந்திய செஸ் நட்சத்திரமான தமிழகத்தை சேர்ந்த ஆர். பிரக்ஞானந்தா, சிங்க்பீல்டு கோப்பை செஸ் தொடரில் சிறப்பாக விளையாடி, 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.
சிங்க்பீல்டு கோப்பை செஸ் தொடரின் 8-வது சுற்றில், பிரக்ஞானந்தா பிரான்ஸ் வீரர் மேக்ஸிம் வச்சியர்-லகிராவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அளவிலான தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், உலக தரவரிசையிலும் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டிக்கான தனது இடத்தையும் பிரக்ஞானந்தா உறுதி செய்துள்ளார்.
மொத்தம் 9 சுற்றுகளைக் கொண்ட சிங்க்பீல்டு கோப்பை தொடரில், பிரக்ஞானந்தா மற்றும் அமெரிக்க வீரர் வெஸ்லி சோ தலா 5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தொடரில் இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால் சிங்க்பீல்டு கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.
1. ஆர். பிரக்ஞானந்தா - 2759.5 புள்ளிகள்
2. அர்ஜுன் எரிகைசி - 2759 புள்ளிகள்
3. விஸ்வநாதன் ஆனந்த் -2739 புள்ளிகள்
4. நிஹல் சரின் - 2718 புள்ளிகள்
5. டி. குகேஷ் - 2703 புள்ளிகள்