ஆம்ஸ்டர்டாம்,
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் ஆர்தர் ரிண்டோனெக் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.