பாங்காக்,
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டிச்-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் லியோ ராலி கார்னன்டோ-டேனியல் மார்ட்டின் இணையை எதிர்கொண்டது.
53 நிமிடம் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சாத்விக்-சிராக் கூட்டணி 12-21, 23-25 என்ற நேர்செட்டில் போராடி வீழ்ந்து 2-வது இடத்துடன் திருப்தி கண்டது. 5-வது முறையாக சாத்விக்-சிராக்குடன் மோதிய இந்தோனேசியா இணை பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி 21-14, 21-18 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் யூ பெய்யை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.