ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றியுள்ளது.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் கவ்லூன் நகரில் நடைபெறு வருகிறது. இத்தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது.
இதில், இந்தியாவின் சாத்விக் - சிராஜ் ஜோடி சீனாவின் ஹு ஹி யுவன் - லின் ஜியன் யுவை எதிர்கொண்டது. 59 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த காலிறுதியில் 21-12, 13-21, 21-16 என்ற செட்களில் சீன ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி முன்னேறியுள்ளது.
இதையடுத்து, அரையிறுதி சுற்றில் டென்மார்க்கின் டேனியல் - மேட்ஸ் ஜோடி அல்லது மலேசியாவின் மென் வெய் சோங் - டி கை உன் ஜோடியை இந்திய ஜோடி எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.