பாங்காக்,
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 19-21, 22-20, 21-6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் கோ சீ பெய்-நூர் இஷூதின் இணையை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த ஆட்டம் 82 நிமிடம் நடந்தது. இறுதிப்போட்டியில் சாத்விக் -சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் ராலி கார்னன்டோ-டேனியல் மார்ட்டின் கூட்ட ணியை எதிர்கொள்கிறது.