பிற விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் 8 இடங்களுக்குள் முன்னேறாததால் இறுதிபோட்டிக்கு முன்னேறும் வாய்ப்டை இழந்தனர்

அல்மட்டி,

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ஷாட்கன்) கஜகஸ்தானில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவின் தகுதி சுற்று 2 வது நாளாக நேற்று நடந்தது. இதில் இந்திய வீரர்கள் யாரும் முதல் 8 இடங்களுக்குள் முன்னேறாததால் இறுதிபோட்டிக்கு முன்னேறும் வாய்ப்டை இழந்தனர். தகுதி சுற்று முடிவில் மைராஜ் அகமது கான் ன் 18வது இடமும், ஆனந்த்ஜீத் சிங் நருகா 38வது இடமும், குர்ஜோத் சிங் கங்குர்ரா 54வது இடமும் பெற்று ஏமாற்றமளித்தனர் .

இதில் ரேங்கிங் புள்ளிக்காக பங்கேற்ற இந்திய வீரர்கள் பவ்தேக் சிங் கில் 19வது இடமும், அபய் சிங் செகோன்71வது இடமும் பெற்றனர்.

இதன் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ரைசா தில்லான் 17வது இடமும், பரிநாஸ் தலிவால் 32வது இடமும், கனேமத் செகோன் 33வது இடமும் பெற்று சொதப்பினர்.