பிற விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடர் - தங்கம் வென்றார் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில்

நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்து உள்ளது.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில், ஜெர்மனி வீரர் மேக்ஸி மிலியனை 16க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

SCROLL FOR NEXT