பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் தரவரிசை: 6-வது இடத்துக்கு முன்னேறி பி.வி. சிந்து அசத்தல்

இந்த ஆண்டில் சிந்து வென்ற 2-வது பட்டம் இதுவாகும்.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஹைலோ ஓபன்

ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் கேர்ஸ்பெல்ட்டை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-12, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இந்த ஆண்டில் சிந்து வென்ற 2-வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு ஜப்பான் ஓபன் தொடரிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

2 இடங்கள் முன்னேற்றம்

ஹைலோ ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் சிந்துவுக்கு 9,200 தரவரிசைப் புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம் சமீபத்திய சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பின் (BWF) உலகத் தரவரிசையில் அவர் இரண்டு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT