கோப்புப்படம்  
பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்- முதல் சுற்றில் ஆகர்ஷி காஷ்யப் தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர்,

மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார்.

முதல் செட்டை 19-21 என்ற செட் கணக்கில் ஆகர்ஷி இழந்தார். இதனால் 2-வது செட்டை வெல்ல கடுமையாக போராடிய அவர் 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் 19-21, 20-22 என்ற கணக்கில் முதல் சுற்றில் ஆகர்ஷி தோல்வியடைந்தார்.

SCROLL FOR NEXT