ராஞ்சி,
பெடரேஷன் கோப்பைக்கான 29-வது தேசிய சீனி யர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்து வந்தது. இதில் கடைசி நாளான நேற்று பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் 56.51 வினாடியில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை சொந்த மாக்கினார்.
பெங்களூரு வீராங்கனை சின்சால் கவீரம்மா (57.77 வினாடி வெள்ளிப்பதக்கமும், மராட்டிய வீராங்கனை ஷிரவானி சச்சின் (59.73 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.