கோப்புப்படம்  
பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை

இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், சீனாவின் ஹான் யூ உடன் மோதினார்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், சீனாவின் ஹான் யூ உடன் மோதினார்.

இந்த போட்டியின் முதல் செட்டை 21-17 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஆகர்ஷி காஷ்யப் ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 13-21, 7-21 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார்.

இதன் மூலம் முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட ஆகர்ஷி காஷ்யப் தொடரில் இருந்து வெளியேறினார். வெற்றி பெற்ற ஹான் யூ 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT