பிற விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் லக்ஷயா சென்,தாய்லாந்தின் குன்லவுட் விடித்சர்ன் உடன் மோதினார்.

சென்னை,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென்,தாய்லாந்தின் குன்லவுட் விடித்சர்ன் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி லக்சயா சென் முதல் செட்டில் 2-0 என முன்னிலை பெற்றிருந்தபோது தாய்லாந்து வீரர் காயத்தால் விலகினார். இதனால் லக்சயா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலிறுதிக்கு முன்னேறினார்.