சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளை யாட்டு அரங்கில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் இறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 18-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் பேஜர் அல்பியான்- முகமது ஷோஹிபுல் பக்ரி இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.
சாய்ராஜ்- சிராக் கூட்டணி, சிங்கப்பூர் ஓப னில் இரட்டையர் பட்டத்தை பெற்ற முதல் இந்திய ஜோடி என்ற சிறப்பை பெற்றது. 2 ஆண்டுக்கு பிறகு அவர்கள் வென்ற முதல் பட்டமா கவும் அமைந்தது. அவர்களுக்கு தங்கப்பதக்கத்துடன் ரூ.70 லட்சம் பரி சுத்தொகையாக கிடைத்தது.