பிற விளையாட்டு

சின்க்பீல்டு கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா ‘டிரா’

கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா டிரா கண்டார்.

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு முந்தைய பந்தய மான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் ரூ.4.5 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டி யில் 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கிளாசிக்கல் வகையிலான இந்த போட்டி 9 சுற்றுகள் கொண்டதாகும். இதன் தொடக்க சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் தமிழகத்தை சேர்ந்த பிரக் ஞானந்தா. அமெரிக்காவின் சாமுவேல் செவியனுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 48-வது காய் நகர்த்தலில் டிரா கண்டார்.

இதே போல் ஜவோகிர் சிந் தாரோவ் (உஸ்பெகிஸ்தான்) லெவோன் அரோனியன் (அமெரிக்கா), வின்சென்ட் கீமர் (ஜெர்மனி)-வெஸ்லி சோ (அமெரிக்கா), அனிஷ் கிரி (நெதர்லாந்து)-மாக்சிம் வாஷியர் லாக் ரேவ் (பிரான்ஸ்) இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தன.