பிற விளையாட்டு

சின்க்பீல்டு கோப்பை செஸ்: முதலிடத்தில் பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா 9-வது மற்றும் கடைசி சுற்றில் வெள்ளை நிற காய் களுடன் அனிஷ் கிரியுடன் மோதுகிறார்.

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 8-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய கிராண்ட்மாஸ்ட ரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா மேக்ஸிம் வாஷிரை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 28-வது நகர்த்தலில் மேக்ஸிம் வாஷிரை தோற்கடித்தார்.

8-வது சுற்று முடிவில் வெஸ்லி சோ, பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் கிராண்ட் செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்துள்ள பிரக்ஞானந்தா 9-வது மற்றும் கடைசி சுற்றில் வெள்ளை நிற காய் களுடன் அனிஷ் கிரியுடன் மோதுகிறார்.