பிற விளையாட்டு

சின்க்பீல்டு கோப்பை செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி

71-வது காய் நகர்த்தலில் 2-வது வெற்றியை பெற்றார்.

கலிபோர்னியா,

சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வருகிறது.

9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நடந்த 4-வது சுற்றில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 71-வது காய் நகர்த்தலில் ஜோர்டான் வான் பாரஸ்டை (நெதர்லாந்து) சாய்த்து 2-வது வெற்றியை பெற்றார்.

4-வது சுற்று முடிவில் பிரக்ஞானந்தா 2% புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.